சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்


சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதையெடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story