சீரான மின்சாரம் வழங்கக்கோரி வயலோகம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சீரான மின்சாரம் வழங்கக்கோரி வயலோகம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

சீரான மின்சாரம் வழங்கக்கோரி வயலோகம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகத்தில் அண்ணாபண்ணை துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து வயலோகம் உள்பட பல பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயலோகம் கிராமத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக சீரான மின்சாரம் வழங்கப்படுவதில்லை எனவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், சீரான மின்சாரம் கிடைக்காததால் அத்தியவசிய தேவைகள் நிறைவேற்ற படமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வயலோகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரி தனபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சில தினங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story