வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை, மாவட்ட செயலாளர் கவியரசு ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நீதிமன்றத்தால் எந்த தடையாணையும் பிறப்பிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி வருகிறது. இதனால் விரைந்து மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story