ஓசூர்-சூளகிரி பகுதியில், விடிய, விடிய கனமழை


ஓசூர்-சூளகிரி பகுதியில், விடிய, விடிய கனமழை
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர், சூளகிரி பகுதியில் விடிய, விடிய கனமழை பெய்தது.

ஓசூர்,

ஓசூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் காணப்பட்டது. மாலை நேரங்களில் லேசாக மழை பெய்தவாறும் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஓசூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.

நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய பெய்த இந்த கனமழை காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது.

மரங்கள் சாய்ந்தன

இதனால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சூளகிரியிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒமதேபள்ளி கிராமத்தில் தென்னை மற்றும் வேப்ப மரங்கள் சாய்ந்து விழுந்தன.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story