குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அரக்கோணம் நேருஜி நகரில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் நகரத்தில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நகரத்தில் உள்ள அனைத்து தெருக்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தபின் இவை படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. பல இடங்களில் அரைகுறையாக பள்ளம் மூடப்பட்டதால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.
தற்போது பெய்த மழையால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு அரைகுறையாக மூடப்பட்ட இடங்கள் புதைகுழியாக மாறியுள்ளது. இதனால் நடந்து செல்வோரும் வாகனங்களில் செல்வோரும் அவதிக்கு ஆளாக நேரிட்டு வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
நாற்று நடும் போராட்டம்
இந்த நிலையில் அரக்கோணம், நேருஜி நகர் 8-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் தேங்கி இருந்த சகதி தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் முருகேசன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், “அரக்கோணம் நகரத்தில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டப்பட்ட ஒவ்வொரு தெருக்களிலும் படிப்படியாக சிமெண்டு சாலை போடப்படும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் நேருஜி நகர் 8-வது தெருவிற்கு சிமெண்டு சாலை போடப்படும். தற்போது தற்காலிகமாக தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story