பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பால் நாட்டின் உற்பத்தி மையமாக திகழும் மராட்டியம் பயனடையும் : முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி


பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பால் நாட்டின் உற்பத்தி மையமாக திகழும் மராட்டியம் பயனடையும் : முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி
x
தினத்தந்தி 24 Sep 2019 12:20 AM GMT (Updated: 24 Sep 2019 12:20 AM GMT)

பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பால் இந்தியாவின் உற்பத்தி மையமாக திகழும் மராட்டியம் பயனடையும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை, 

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு பெரு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரியை சுமார் 10 சதவீதம் வரை அதிரடியாக குறைத்து மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முடிவு குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரு நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்க மத்திய அரசு தைரியமான முடிவை எடுத்துள்ளது. கார்பரேட் வரி குறைப்பால் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக விளங்கும் மராட்டியம் பெரிதும் பயனடையும்.

தற்போது உலகளாவிய பொருளாதார மந்தநிலை உள்ளது. இது உள்நாட்டு தொடர்புடையது அல்ல. உலகளாவிய பிரச்சினையாகும். பட்ஜெட் நிலையானது அல்ல. பிரச்சினைகளை தீர்க்க அவ்வப்போது முடிவுகளை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்தக போர் இந்தியாவுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளங்களை இங்கு மாற்ற திட்டமிட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story