அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விரைவு சைக்கிள் போட்டி மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விரைவு சைக்கிள் போட்டி மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 9:12 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விரைவு சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:– அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அண்ணா சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


கல்வி கற்கும் காலங்களிலேயே மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி உடல் நலத்தையும், சிறந்த மனநலத்தையும் பெற வேண்டும். மேலும் விளையாட்டு துறையின் மூலம் கிராமபுற, நகர்புற இளைஞர்களை உலக அளவில் சாதனையாளர்களாக உருவாக்கும் பணியினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசும் வேலைவாய்ப்பு வழங்குவதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. பெற்றோர்களும் இதற்கு உருதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட சைக்கிள் அசோசியேசன் செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story