வண்டலூர் அருகே பேராசிரியையை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் 5 பேர் மீது வழக்கு


வண்டலூர் அருகே பேராசிரியையை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Sept 2019 3:45 AM IST (Updated: 25 Sept 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் அருகே பேராசிரியையை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது செல்போன், பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் பல்மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வரும் 23 வயதான உதவி பேராசிரியை கல்லூரியின் பொது மேலாளர், உதவி முதல்வர் உள்பட சிலர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முகநூல் வாயிலாக வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கல்லூரியில் கடந்த 1½ ஆண்டுகளாக விடுதியில் தங்கி உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். கல்லூரி ஊழியர்கள் லட்சுமிகாந்தன் மற்றும் செந்தில் ஆகியோர் என்னை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர். கல்லூரியின் துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் என்னை பணிநீக்கம் செய்வதாக மிரட்டுகிறார்.

மேலும் அந்த கல்லூரியில் பணிபுரிந்துவரும் ஊழியர் கிருஷ்ணேஷ்வரி, பேராசிரியைகள் இருக்கும் அறைக்குள் செல்லும்போது தன்னை மிகவும் கீழ்த்தரமாக பேசி மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தி அந்த அறையில் இருந்து என்னை வெளியேற்றினார். கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து உணவு, குடிநீர் தராமல் துன்புறுத்தினர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில் கல்லூரி பொது மேலாளராக உள்ள சசிகுமார் தன்னை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்ததாகவும், துப்புரவு பணியாளர் முனியம்மாள் தன்னிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து வைத்திருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

வெங்கடகிருஷ்ணன், லட்சுமிகாந்தன், சசிகுமார், செந்தில், முனியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story