நவிமும்பையில் 4 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது


நவிமும்பையில் 4 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2019 4:40 AM IST (Updated: 25 Sept 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் 4 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

நவிமும்பை தலோஜா பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டு அருகே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் யாதவ் (வயது24) என்ற வாலிபர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்து பெற்றோர் அவளிடம் விசாரித்தனர். இதனால் அந்த சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித் தாள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அசோக்குமார் யாதவ் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோக் குமார் யாதவை கைது செய்தனர்.

விசாரணையில் அவரது சொந்த ஊர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் என்பதும், நவிமும்பை தலோஜாவில் கடந்த சில மாதங்களாக தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

Next Story