உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அம்மையப்பநல்லூர் பள்ளத்தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 22). ஏ.சி. மெக்கானிக். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வினோத் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து உத்திரமேரூருக்கு வந்ததாக கூறப்படுகிறது. வேடபாளையம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற உத்திரமேரூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story