மேல்மருவத்தூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி


மேல்மருவத்தூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 28 Sept 2019 4:00 AM IST (Updated: 28 Sept 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தென்னக ரெயில்வே துறையும் இணைந்து மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு ரெயில்நிலையத்தை தூய்மைப்படுத்தினர். பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதில் கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெங்கடேசன், தென்னக ரெயில்வே விழுப்புரம் முதன்மை கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். இதில் ரெயில்வே நிலைய கண்காணிப்பாளர் அமிர்தலிங்கம், கல்லூரி நிர்வாக அலுவலர் ஏழுமலை, கல்லூரி பேராசிரியர்கள் இரா.ராதா, விஜயலட்சுமி, ரெயில்வே ஊழியர்கள், பொது மக்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

Next Story