மேச்சேரி அருகே நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு - 6 பேர் கைது
மேச்சேரி அருகே இயங்கி வந்த நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூணான்டியூர் ஊராட்சி கீரைக்காரனூர் பகுதியில் நாட்டு துப்பாக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், கீரைக்காரனூர் பகுதியை சேர்ந்த காசி (வயது 65) என்பவர், சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள மூலக்காடு பகுதியில் இருக்கும் தனது மாமியார் வீட்டில் ரகசியமாக நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூலக்காடு சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் உளி, பித்தளை தகடுகள், ஆக்சா பிளேடு, இரும்பு உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த 6 நாட்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் காசியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து சேலம், தர்மபுரி மாவட்டங்களில் விற்பனை செய்து வந்துள்ளார்.
பின்னர் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்ததாக காசி, வெடிக்காரனூரை சேர்ந்த அய்யமுத்து என்கிற அய்யந்துரை(48), செல்வராஜ்(34), வெங்கட்(41), காமிநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரியசாமி (38), எடப்பாடி கோனங்குட்டையூரை சேர்ந்த சத்தியராஜ் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் காசி நாட்டு துப்பாக்கியை தயாரித்து அதனை மேற்கண்ட 5 பேரிடம் விற்பனை செய்துள்ளார். அவர்கள் அந்த துப்பாக்கி மூலம் மூலக்காடு அருகே உள்ள மலைப்பகுதியில் செந்நாய், காட்டுப்பன்றி, முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் வனவிலங்குகளை வேட்டையாட தான், நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கப்பட்டதா? அல்லது நக்சலைட்டுகளுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டதா?, மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நாட்டு துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சேலம்- தர்மபுரி எல்லைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story