தலைமுடிக்கு அடிக்கும் ‘ஹேர்-டை’ குடித்து துணிக்கடை பெண் ஊழியர் தற்கொலை


தலைமுடிக்கு அடிக்கும் ‘ஹேர்-டை’ குடித்து துணிக்கடை பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Sept 2019 4:45 AM IST (Updated: 28 Sept 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

தலைமுடிக்கு அடிக்கும் ‘ஹேர்-டை’ குடித்து துணிக்கடை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

நெல்லை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி(வயது 21). இவர், சென்னை தியாகராயர்நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

பரமேஸ்வரி கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவருடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்கள், பணிமுடிந்து அறைக்கு வந்து பார்த்தபோது பரமேஸ்வரி மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பரமேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அறையில் தனியாக இருந்த பரமேஸ்வரி, தலைமுடிக்கு அடிக்கும் ‘ஹேர்-டை’யை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிந்தது. இதுபற்றி பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story