பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்பு


பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்பு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:15 AM IST (Updated: 29 Sept 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து பயன்பாடின்றி இருந்து வந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், திருமானூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பார்வையிட்டார். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்த காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story