பொருளாதார சரிவு விரைவில் சரி செய்யப்படும் கும்பகோணத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பொருளாதார சரிவு விரைவில் சரி செய்யப்படும் கும்பகோணத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 30 Sept 2019 4:45 AM IST (Updated: 30 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார சரிவு விரைவில் சரி செய்யப்படும் என கும்பகோணத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கும்பகோணம்,

ஐ.நா.சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் சிறப்பை எடுத்து கூறி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் உலக நாடுகளுக்கு தமிழின் பெருமையை பிரதமர் மோடி எடுத்து காட்டியுள்ளார். இதற்காக தமிழக சட்டசபையை கூட்டி பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இடைத்தேர்தல்

சட்டசபை இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி பா.ஜ.க. எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக காவல் துறையில் ஊழல் நடைபெற்றிருந்தால் அது பற்றி தமிழக அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லாததால் பொருளாதார நெருக்கடி பற்றி பேசி வருகின்றனர். தொழில் அதிபர்களின் கருத்துக்களை வைத்து அரசின் பொருளாதாரத்தை கணிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது.

வளர்ச்சியில் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பொருளாதார சரிவு விரைவில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story