களக்காட்டில் வீட்டில் விபசாரம் நடத்திய 3 பேர் கைது - 2 பெண்கள் மீட்பு
களக்காட்டில் வீட்டில் விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு வியாசராஜபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், களக்காடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் அங்கு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழதேவநல்லூரை சேர்ந்த மணி மனைவி லட்சுமி (வயது 54), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சவுமியா (40), மேலப்பத்தை ஆசாத்புரத்தை சேர்ந்த பரமானந்தம் (65) ஆகியோர் என்பதும், 3 பேரும், களக்காடு வியாசராஜபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் 3 பேரும் சேர்ந்து நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேனி மாவட்டம் மற்றும் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்த 2 பெண்களிடம் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் பரமானந்தம் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட 2 பெண்கள் உள்பட 5 பேரையும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story