சூளகிரி அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் தெல்லநீள குட்டை தூர்வாரும் பணி - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு


சூளகிரி அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் தெல்லநீள குட்டை தூர்வாரும் பணி - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட தெல்லநீள குட்டையை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சூளகிரி,

சூளகிரி ஒன்றியம் கோமேப்பள்ளி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தெல்லநீள குட்டை ரூ.1 லட்சத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஏரியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் கிரு‌‌ஷ்ணகிரி அணை பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை பயிற்சி மைய முதல்வர் அய்யப்பன் உடன் இருந்தார்.

மேலும் பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ள ஊரக வளர்ச்சி துறை பயிற்சி வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இதேபோல அந்த பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூட்டஅரங்கு கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்திட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் உத்தனப்பள்ளி ஊராட்சி கோவிந்தாபுரத்தில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

Next Story