தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்
மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
தேனி,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழை சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிப்பிடம் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பிடங்கள், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story