சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் ஜம்மு காஷ்மீர் நேற்றும்-இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மூத்த வக்கீல் அழகானந்தம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜசேகரன், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் பாலாஜிபாபு, சிவராமபுரம் வீரராகவ சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் முருகன் வரவேற்றார். இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு ஜனநாயக நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. ஒரு நாடு, அதன் நிலப்பரப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு அமைய முடியாது.
சுற்றுலா செல்லலாம்
சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இந்தியா என்றும், மற்ற 565 சமஸ்தானங்களை அவர்களின் விருப்பப்படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ, அல்லது தனியாகவோ இருக்கும் உரிமையை கொடுத்துவிட்டு சென்றனர். அப்போது பிரதமராக இருந்த நேரு, 564 சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை அப்போது உள்துறை மந்திரியாக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலிடம் ஒப்படைத்தார். பல போராட்டத்திற்கு பிறகு, தற்போது பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் ஜம்மு-காஷ்மீரின் 370-வது சிறப்பு சட்டப்பிரிவை நீக்கி தீர்வு காணப்பட்டுள்ளது. இனிமேல் தமிழக மக்கள் சுற்றுலா, ஆன்மிக பயணத்திற்கு காஷ்மீருக்கு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க.வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளர் நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story