நாகை பகுதிகளில் விடிய, விடிய மழை நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்தது


நாகை பகுதிகளில் விடிய, விடிய மழை நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 8:24 PM GMT)

நாகை பகுதிகளில் விடிய,விடிய பெய்த மழையால் நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்துக்குள்தண்ணீர் புகுந்தது.

நாகப்பட்டினம்,

இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நாகையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது.

கோவில் வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்தது

இதில் நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்தில்மழைநீர் புகுந்துதேங்கி நின்றது. மேலும் நாகை பப்ளிக் ஆபீஸ்ரோடு, வ.உ.சி.தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வேளாங்கண்ணி, கீழையூர், மேலப்பிடாகை, கீழ்வேளூர், சிக்கல், நாகூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.


Next Story