தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 51 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 51 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 51 மி.மீட்டர் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஆறுகளில் தண்ணீர் சென்று வரும் நிலையில் மழையும் பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சாய்ந்ததால் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சையில் நேற்று அதிகாலையில் மழை பெய்தது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இவற்றுடன் கழிவுநீரும் பல்வேறு இடங்களில் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. தஞ்சை சிவாஜி நகரில் இருந்து மருத்துவக்கல்லூரி சாலைக்கு செல்லும் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மற்றும் பஸ் நிலையம், போலீஸ் நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் என அனைத்து இடங்களிலும் மழை நீர் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்வதால் நோய் தடுப்பு நடவடிக்கையில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துள்ளது என தெரிவித்த இந்த பகுதி மக்கள் மழை நீர் வடிவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

மழை அளவு விவரம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

பட்டுக்கோட்டை-51, அதிராம்பட்டினம்-40, பேராவூரணி-26, திருவிடைமருதூர்-22, மதுக்கூர்-19, அணைக்கரை-19, வெட்டிக்காடு-18, ஈச்சன்விடுதி-17, மஞ்சளாறு-16, கும்பகோணம்-15, தஞ்சை-10, பாபநாசம்-10, அய்யம்பேட்டை-8, நெய்வாசல் தென்பாதி-8, திருக்காட்டுப்பள்ளி-7, வல்லம்-6, திருவையாறு-5, பூதலூர்-3, கல்லணை-3, ஒரத்தநாடு-3, குருங்குளம்-1.

Next Story