நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு


நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினர்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். கடைசி நாளான நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அவருக்கு ஆதரவு திரட்டவும் சூட்டோடு சூடாக களமிறங்கினர். அதாவது முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர் கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வேட்பாளர் ஜான்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை தி.மு.க. தெற்கு மாநில அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவாவை சந்தித்து நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பின்னர் தி.மு.க. வடக்கு மாநில மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமாரை சந்தித்து ஆதரவு கோரினர்.

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசினர். அப்போது நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜான்குமார் வெற்றி பெற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். நமது கூட்டணி கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story