தேனி,லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
தேனி, கம்பம் மெட்டுச்சாலையில் லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்,
கம்பம் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வினோத்ராஜா மற்றும் போலீசார் கம்பம் மெட்டுச்சாலையில் உள்ள 18–ம் கால்வாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கூடலூர் பொம்மச்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ராஜன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 168 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கம்பம் மெட்டுச்சாலையில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கம்பம் நந்தகோபாலன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story