திருமங்கலத்தில் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமங்கலத்தில் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர் மேற்கு, அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவகுமார்(வயது 53). இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வராணி.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சிவகுமார், படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி செல்வராணி, அறைக்குள் சென்று பார்த்தார்.

அங்கு தனது கணவர் சிவகுமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமங்கலம் போலீசார், தூக்கில் தொங்கிய சிவகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரின் தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

செங்குன்றம் பாடிகுப்பம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் நீசி(22). இவருக்கு திருமணமாகி அக்சயா என்ற 3 வயது மகள் உள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு நீசியின் கணவர் இறந்துவிட்டதால் மகளுடன், தாய் வீட்டில் நீசி வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நீசி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கணவர் இறந்த துக்கம் தாளாமல் நீசி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story