கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல் தந்தை-மகனுக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினை காரணமாக பெண்ணை தாக்கிய தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்த புலியூரை சேர்ந்தவர் அம்பிகை (வயது 51). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (55). இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் முத்துசாமி தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி உள்ளார். அப்போது அம்பிகைக்கு சொந்தமான இடத்திலேயும் குழி தோண்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்பிகை, முத்துசாமியை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி, அவருடைய மகன் செல்வவிஜய்(27) ஆகியோர் சேர்ந்து அம்பிகையை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வலைவீச்சு
இதுகுறித்து அம்பிகை கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வவிஜய், முத்துசாமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story