திருச்சி பேராசிரியை கடத்தல்: குற்றாலத்தில் பதுங்கிய அ.தி.மு.க. நிர்வாகிக்கு தனிப்படை வலைவீச்சு
திருச்சி பேராசிரியை கடத்தல் வழக்கில், குற்றாலத்தில் பதுங்கிய அ.தி.மு.க. நிர்வாகியை பிடிக்க தனிப்படை விரைந்தது. மேலும் அ.தி.மு.க. நிர்வாகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மலைக்கோட்டை,
திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்ற வணக்கம் சோமு (வயது 40). இவர், மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. பொருளாளராகவும், திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இயக்குனராகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சமீபகாலமாக சோமு, தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் மகாலட்சுமி (32) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்து மகாலட்சுமியின் தாயார் நாகலட்சுமி மற்றும் உறவினர்கள் சோமுவை அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது அவர், இனிமேல் மகாலட்சுமியை தொந்தரவு செய்யமாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமி தனது தோழி ஹேமாவுடன் கல்லூரிக்கு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய எண்ணி, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் வணக்கம் சோமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மகாலட்சுமியை கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமா, மகாலட்சுமியின் தாய் நாகலட்சுமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். பின்னர் பேராசிரியை கடத்தல் குறித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாகனம் மதுரை பைபாஸ் சாலையில் மதுரை நோக்கி செல்வது தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த சோமு, கடத்தப்பட்ட மகாலட்சுமியை துவரங்குறிச்சியில் நடுவழியில் இறக்கி விட்டு தப்பினர். பின்னர் மகாலட்சுமியை போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே தலைமறைவான சோமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் தயாளன், சக்திவேல், முருகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது சோமு உள்ளிட்ட 6 பேரும் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படையினர் நேற்று குற்றாலம் விரைந்தனர்.
இந்தநிலையில் வணக்கம் சோமுவை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் வணக்கம் சோமு என்கிற கே.சோமசுந்தரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story