பாடாலூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டம்
பாடாலூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 50). வெளிநாட்டில் பணி புரிந்த இவர் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு பாடாலூரில் ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு தற்காலிக மின் இணைப்பு தேவைப்பட்டது. அதற்காக பாடாலூரில் உள்ள மின் அலுவலகத்தை அணுகி அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அதற்காக அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்யாணி இதுகுறித்து அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நேற்று காலை அதிகாரிகள் அலுவலகத்தின் உள்ளே இருக்கும்போதே மின் அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அதிகாரிகள் இதுகுறித்து பாடாலூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story