குளக்கரையில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது


குளக்கரையில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே குளக்கரையில் ஐம்பொன்சிலை கண்டெடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவர் நேற்று முன்தினம் பிடாரி குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது குளக்கரையில் முருகன் சிலை ஒன்று கிடந்தது. இந்த சிலையை கண்ட அவர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் சிலையை கைப்பற்றி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஐம்பொன்சிலை

குளக்கரையில் கிடந்த முருகன் சிலை 1½ கிலோ எடை கொண்ட ஐம்பொன்சிலை ஆகும். இந்த சிலை திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதே குளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி தூர்வாரும் பணியின்போது 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story