அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட நீதிபதி பங்கேற்பு


அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட நீதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

அம்மையப்பன் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி கலைமதி கலந்து கொண்டார்.

கொரடாச்சேரி,

காந்தி பிறந்த நாளையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சியின் தனி அலுவலர் வாசுதேவன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட தலைமை நீதிபதி கலைமதி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நிறைவேற்றுவது பொதுமக்களின் கைகளில்தான் இருக்கிறது. குறிப்பாக பெண்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகங்களை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுவதால் நீர்நிலைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.

ஆலோசனைகள்

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைகளை பெறுவதற்காகவும், தீர்வு காண்பதற்காகவும் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் தங்கள் தரப்பு பாதிப்புகளையும், ஆலோசனைகளையும் கேட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story