கும்பகோணத்தில் காந்தி முகமூடி அணிந்து மாணவர்கள் ஊர்வலம்
கும்பகோணத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி காந்தி முகமூடி அணிந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் உள்ள நகர மேல்நிலைப்பள்ளியில் நேற்று காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 150 மாணவர்கள் காந்தி முகமூடி அணிந்தபடி பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் காந்தியின் தேசப்பற்று பாடல்கள் பாடி, கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் தமிழ்ச்செல்வன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மோகன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் அலுவலக செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலை காந்தி சதுக்கத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். பண்ணவயல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன், வக்கீல்கள் ராமசாமி, ரெங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிவா வரவேற்றார். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு நன்றி கூறினார்.
இதேபோல் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜ் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வக்கீல் ராமசாமி வரவேற்றார். பண்ணவயல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாதம்பி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தண்டபாணி, வைரக்கண்ணு, தாயுமானவன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துவரங்குறிச்சி
பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி முக்கூட்டு சாலையில் காந்தி பிறந்தநாள் விழா வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் வட்டார காங்கிரஸ் தலைவர் முத்தரசு வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் மகேந்திரன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சக்திவேல் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தார். முடிவில் மணிவண்ணன் நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை நகர இந்திய கம்யூனிஸ்டு சார்பில் அறந்தாங்கி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி மாலை அணிவித்தார். அப்போது நகர செயலாளர் சுதாகர், நிர்வாகிகள் ரோஜா, ராஜசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
த.மா.கா.
பட்டுக்கோட்டை நகர த.மா.கா. சார்பில் நாடிமுத்து நகர் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் காமராஜ் நினைவு தினத்தையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் த.மா.கா. நகர தலைவர் குமார் தலைமை தாங்கினார். கண்ணன், நாடிமுத்து, மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வி.என்.எஸ். பேரவை தலைவர் மோகன், வட்டார தலைவர் வைத்தியலிங்கம், நகர இளைஞர் அணி தலைவர் அரசகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முருகேசன் வரவேற்றார். முடிவில் அன்வர் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story