மாவட்ட செய்திகள்

நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் பலி + "||" + Car collision on motorcycle near Northampton; 2 workers including a worker killed

நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி உள்பட 2 பேர் பலி
நார்த்தாமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர் துவரவயலை சேர்ந்த பழனிச்சாமி (35). இவர்கள் இருவரும் பொம்மாடிமலையில் இருந்து நார்த்தாமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நார்த்தாமலை கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அந்த வழியாக நடந்து சென்ற ஜன்னத்பேகம் என்ற பெண் மீதும் கார் மோதியதில் அவரும் படுகாயமடைந்தார்.

டிரைவர் கைது

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜன்னத்பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்தம்பி, பழனிச்சாமி ஆகிய 2 பேரின் உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கார் டிரைவர் கீழக்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேசனை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
3. வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
இண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. எட்டயபுரம் அருகே,லாரி மீது கார் மோதியதில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலி - 6 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் பண்ருட்டியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கயத்தாறு அருகே பரிதாபம்: லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி
கயத்தாறு அருகே லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலியானார்.