காமராஜர் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
காமராஜரின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் காமராஜரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் மகாத்மா காந்தி, காமராஜர், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு காந்தி, காமராஜர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திருமுருகன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், காமராஜ் நகர் தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியர்பேட்டை செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய நீதிக் கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொன். நடராஜன், தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story