காஞ்சீபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார்


காஞ்சீபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 8:50 PM GMT)

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.பொன்னையா வெளியிட்டார்.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, உத்தரவிடப்பட்டது. வார்டுகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட ஊரக வளச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி வி.சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, காஞ்சீபுரம் நகராட்சி பொறியாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்த வாக்காளர்கள் 17 லட்சத்து 2 ஆயிரத்து 966 பேர் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,138 ஆகும்.

மேலும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர்களின் வரைவு வாக்காளர் பட்டியல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் முன்னிலையில், ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

Next Story