சிலை திருட்டுக்கும், கலைக்கூடத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை பொன்மாணிக்கவேல் பேட்டி


சிலை திருட்டுக்கும், கலைக்கூடத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை பொன்மாணிக்கவேல் பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 6:44 PM GMT)

சிலை திருட்டுக்கும், கலைக்கூடத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

தஞ்சாவூர்,

மீட்கப்பட்ட 2 சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கலைக்கூடத்திற்கு வந்துள்ளன. இதில் வீணாதரதட்சிணாமூர்த்தி என்ற தஞ்சை அழகர் சிலை ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியரால், ராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டில் செய்து பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பதஞ்சலி முனிவரின் சிலையும்(தொப்புளுக்கு மேல் மனித உடலும், கீழே 3 நாக பாம்பு வளையம், 5 தலைநாகம், தலைக்கு மேல் குடையாக இருக்கும் வண்ணம் செய்து அளித்துள்ளார்). மேலும் காதுகளுக்கும், கைகளுக்கும் தங்கத்தினால் ஆன பூக்களையும், தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான ஆதாரம் கோவில் கல்வெட்டில் உள்ளது.

சம்பந்தம் இல்லை

திரிபுராந்தகர் சிலை தஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமானது. இதுவும் அதே காலகட்டத்தை சேர்ந்தது என்று பிரிட்டீஷ் தொல்லியல் நிபுணர் டக்ளஸ்பேரட் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த 2 சிலைகளையும் பொறுத்தவரையில் திருட்டு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சிலைகள் கலைக்கூடத்திற்கு வருவதற்கு முன்பே குற்றங்கள் நடந்துள்ளன. அதனால் கலைக்கூடத்திற்கும், இந்த திருட்டு சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை. கலைக்கூடத்திற்கு வந்த பின்னர் காட்சிப்பொருளாக இதனை வைத்துள்ளனர்.

கலைக்கூடத்திற்கு வருவதற்கு முன்னால் தஞ்சையில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் சில காலங்களும், அதன் பின்னர் அரண்மனை தேவஸ்தானம் வசமும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த 2 சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்பு உடையது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story