டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையின்றி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையின்றி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபாரத்தை நகராட்சி ஆணையர் விதித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நகரமன்ற 14-வது வார்டு சன்னதி தெருவில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அங்கு மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை பகுதியில்் வைத்திருந்த பழுதடைந்த டயர்கள் மற்றும் பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறிப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ரூ.25 ஆயிரம் அபராதம்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சங்கரன் கூறுகையில், வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்காதவாறு தூய்மையாக பராமரிக்க வேண்டும். கொசுப்புழு உருவாகும் கலன்கள் கண்டறியப்பட்டால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். தற்போது கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தூய்மையின்றி பராமரித்த மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 50 பணியாளர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

Related Tags :
Next Story