கீரமங்கலத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
கீரமங்கலத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி, வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, ஆலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக வாழை விவசாயம் செழிப்பாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை, மின்வெட்டு, கஜா புயல் பாதிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, இயற்கை சீற்றங்களால் சேதம் ஆகிய காரணங்களால் வாழை விவசாயம் குறைய தொடங்கியது. இதனால் இப்போது குறிப்பிட்ட அளவில் மட்டுமே வாழை விவசாயம் நடக்கிறது.
குறையும் விலை கவலையில் விவசாயிகள்
சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் வாழை மற்றும் பலா, காய்கறிகளை விற்பனை செய்ய கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு காகிதமில்சாலை, கொத்தமங்கலம், மறமடக்கி ஆகிய ஊர்களில் உள்ள காய் கனி கமிஷன் கடைகளுக்கே விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் ஆயுத பூஜைக்காக நேற்று முன்தினம் கீரமங்கலம் மற்றும் அனைத்து ஏலக்கடைகளுக்கும் வெளியூர்களில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். வாழைத்தார்கள் ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகளும் வந்திருந்தனர். வாழைத்தார் ஏலம் விடும் போது, வாழைத் தார்கள் பெரியதார் அதிகபட்சம் ரூ. 400-க்கும், சிறியதார் ரூ.100-க்கும் என்ற வீதத்தில் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் தவிக்கும் நிலையில், ஒரு வாழை தாருக்கு இடுபொருட்கள், மருந்து, உற்பத்தி செலவு ரூ.200-க்கும் மேல் ஆகிறது. ஆனால் சராசரி நாட்களைவிட ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் விலை ஏற்றம் இருக்கும். ஆனால் தற்போது மற்ற நாட்களில் விற்பனையானதைவிட பண்டிகை விற்பனையில் விலை குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் என்றனர்.
இழப்பீடு இல்லை
மேலும், கஜா புயலில் அத்தனை வாழையும் ஒடிந்து சாய்ந்தது. ஆனால் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. வாழை மரங்கள் ஒடியும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கு எடுக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இதுவரை இழப்பீடு வழங்குவதில்லை. அதனால் வாழை போன்ற விவசாய பயிர்கள் இயற்கை சேதம் அடையும் போது இழப்பீடு தர வேண்டும் என்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்கள் வரை வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனை ஆனது. புயல் பாதிப்பால் வாழைத்தார்கள் குறைந்ததால் வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தோம். ஆனால் தற்போது கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வாழைத் தார்கள் அனுப்ப முடியவில்லை. இதனால் விற்பனை விலை குறைந்துவிட்டது என்றனர்.

Related Tags :
Next Story