தீபாவளியை முன்னிட்டு கதர் தள்ளுபடி சிறப்பு விற்பனை; கலெக்டர் தொடங்கி வைத்தார்
காரைக்குடியில் தீபாவளியை முன்னிட்டு கதர் தள்ளுபடி சிறப்பு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள கதர் பட்டு எம்போரியம் வளாகத்தில் கதர் கிராமத் தொழில் வாரிய விற்பனைத்துறையின் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கலெக்டர் காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்பு, குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- கதர் ஒரு வாழ்க்கை தத்துவம் கதர் என்பது வெறும் நூல் இலைகளால் ஆன துணி மட்டுமல்ல. அது சுதந்திர போராட்ட காலத்தில் போராட்ட வீரர்களுக்கு கிடைத்த ஒரு பேராயுதம். காந்தியடிகள் சுதேசிப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சுதந்திர போராட்ட ஆயுதமாக கையால் நூற்கும் ராட்டையை பயன்படுத்தினார்.
கதர் ஆடைகளால் பல அடிதட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. எனவே காந்தியடிகளின் சுதந்திர போராட்டகால சின்னமாகத் திகழும் இந்த கதர் ஆடையினை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் தலையாய கடமையாகும். தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் தேசியத் தலைவர்களின் நினைவு தினம் ஆகிய தினங்களில் கதராடை அணியுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு ஊழியர், ஆசிரியர் பெருமக்கள் ஒவ்வொருவரும் ஒரு கதராடையாவது வாங்கி வாரத்தில் ஒருநாள் அணிந்து கதர் நெசவாளர் குடும்ப முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தீபாவாளி சிறப்பு விற்பனை இலக்காக சுமார் ரூ.1½ கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கதர், பட்டு ரகங்களுக்கு அரசு தள்ளுபடி 30 சதவீதம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களுக்குத் தேவையான கதர் ஆடைகளை வாங்கி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தூய கதர் ஆடையினை அணிந்து இந்த தீபாவளியினை மகிழ்வுடன் கொண்டாடுங்கள். இதுவே சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றியறிதல். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குடிசை தொழில் ஆய்வாளர் தேவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, கதர் தொழில்நுட்ப வல்லுனர் சந்தானகிருஷ்ணன், கதர் விற்பனை மைய மேலாளர் சுசிலா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story