மாவட்ட செய்திகள்

திருக்கனூர் பகுதியில் 2 வீடுகளில் மீண்டும் நகை, பணம் கொள்ளை + "||" + In the Tirukkanur area 2 homes back jewelry, money robbery

திருக்கனூர் பகுதியில் 2 வீடுகளில் மீண்டும் நகை, பணம் கொள்ளை

திருக்கனூர் பகுதியில் 2 வீடுகளில் மீண்டும் நகை, பணம் கொள்ளை
திருக்கனூர் பகுதியில் மீண்டும் 2 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருக்கனூர்,

திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் சுந்தர்ராஜ், இரும்பு வியாபாரி பச்சையப்பன் ஆகியோரது வீடுகளில் மர்ம நபர்கள் நள்ளிரவில் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றனர். இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் திருக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.


இதுபற்றிய விவரம் வருமாறு;-

திருக்கனூர் அருகே உள்ள மணலிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். விவசாயி. இவரது தாய் குப்பம்மாள்(வயது 70). மனைவி ஜெயாவுடன் சடகோபன் மாடி வீட்டிலும், அவரது தாய் குப்பம்மாள் அருகில் உள்ள ஓட்டு வீட்டிலும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டு வாசலில் குப்பம்மாள் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் குப்பம்மாளின் ஓட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர் எதிரில் குடியிருக்கும் ஞானசுந்தரம் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக உள்ளே கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கு தூங்கி கொண்டிருந்த ஞானசுந்தரத்தின் மனைவி விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் திருடன் திருடன் என அலறினார். இதனால் உஷார் அடைந்த முகமூடி கொள்ளை யர்கள் அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

புதுவை மாநிலத்தில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி, கொலை என வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அதாவது, கடந்த மாதம் இறுதியில் காலாப்பட்டில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் படுகொலை, கடந்த வாரம் கரிக்கலாம்பாக்கத்தில் ரோந்து சென்ற போலீசாரை ரவுடிகள் தாக்கியது, வீட்டில் புகுந்து திருட்டு என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

திருக்கனூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில், வியாபாரி வீட்டில் திருட்டு
திருப்பத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
2. முத்தியால்பேட்டையில், மின்துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
முத்தியால்பேட்டையில் மின்துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு
மோட்டார்சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
4. ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்
ஆத்தூரில் போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.