மாவட்டத்தில் கடைகள்-தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய கடைகள், தொழில்நிறுவனங்கள் உள்பட அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள பெரிய அளவிலான டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள், ஆட்டோ, கார் மற்றும் வேன் நிறுத்தங்கள் போன்றவற்றில் ஒலி பெருக்கி, மா இலை தோரணங்கள் கட்டி, சுண்டல், பொரி, அவல் போன்ற பல்வேறு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதேபோல் பெட்டிக்கடைகள் போன்ற சிறிய கடைகளிலும் தங்களது வசதிக்கு ஏற்ப சுண்டல், பொரி, அவல் போன்ற பல்வேறு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களின் டிரைவர்கள் தங்களது வாகனங்களை தண்ணீரால் கழுவி, வாகனங்களின் முன்பக்கம் வாழைக்கன்றுகளை கட்டியும், மாலை அணிவித்தும், மா இலை தோரணங்கள் கட்டியும் வாகனங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஊக்கத்தொகை-பிரசாதம்
இதேபோல அனைத்து கடைகளிலும் சிறிய வாழைக்கன்றுகள் மற்றும் மா இலைகளால் தோரணங்கள் கட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அனைத்து பஸ்களின் முன்பகுதியில் சிறிய வாழைக்கன்றுகளை கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளில் தினமும் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தப்படுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு, உரிமையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஊக்கத்தொகைகள் மற்றும் பிரசாதங்களை வழங்கினர். மேலும் பல வீடுகளிலும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
அன்னவாசல்
அன்னவாசல் பகுதிகளில் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வாடகை ஆட்டோ, கார், வேன் நிறுத்தங்கள், மெக்கானிக் பட்டைறகளில், மருத்துவமனைகள், மின்சாரவாரிய அலுவலகங்கள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக கடைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கலர் காகிதங்கள்ஒட்டப்பட்டு வாழைமரங்கள் நடப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பொரி, கடலை, பொங்கல், அவுல், கேசரி உள்ளிட்டவையுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டு ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
வாகனங்களை கழுவி சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல் இருந்திரப்பட்டி ஊராட்சி அலுவலகம், காவேரிநகர் ஆரம்பசுகாதார நிலையம், செங்கப்பட்டி மின்சாரவாரிய அலுவலகம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல சரஸ்வதி பூஜையையொட்டி, வீடுகளில் பள்ளி குழந்தைகளின் பாட புத்தகங்களை வைத்து, அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படையலிட்டு வழிபட்டனர்.
ஆலங்குடி
ஆலங்குடி பகுதிகளில் ஆயுதபூஜையை முன்னிட்டு அனைத்து வீடுகளில், வியாபார நிறுவனங்களிலும் மா இலை தோரணம் மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அவல், பொரி மற்றும் சுண்டல் ஆகியவற்றை வைத்து தேங்காய் உடைத்து வியாபாரம் பெருகவும், குடும்பம் சிறக்கவும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல ஆலங்குடி சிவன் கோவில், நாடியம்மன் கோவில், விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story