தோவாளை கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


தோவாளை கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை கிருஷ்ணன்புதூர் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

தோவாளை கிருஷ்ணன்புதூரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி மற்றும் தசரா மகிஷா சூரசம்ஹார விழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் காயத்ரி மந்திரம், தீபாராதனை, கொலு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

10-ம் திருவிழாவான நேற்று காலை வித்யாரம்பம், தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடந்தது. அன்னதானத்ைத செங்கல்பட்டு பைரவர் சித்தாந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார். மாலையில் தோவாளை ஊர் சமுதாய தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சூரசம்ஹாரம்

பின்னர் பஞ்ச வாத்தியம், பூகாவடி, சிங்காரி ேமளம் தாளங்கள் முழங்க முருகன்கோவில் மலை அடிவாரத்தில் முத்தாரம்மன் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். நிகழ்ச்சியில் குழு நிர்வாகிகள் லட்சுமணன், சொக்கலிங்கம், கிருஷ்ணகுமார், கிருஷ்ணன், இசக்கி முத்து, அண்ணாத்துரை, சண்முகம்பிள்ளை, முத்து மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாணவேடிக்கை, அம்மனுக்கு அபிஷேகம், இரவில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி போன்றவை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். விழாவையொட்டி நேற்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story