மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + 35 pound jewelery at army soldier's home, Rs 2 lakh robbery

ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவட்டார் அருகே ராணுவ வீரர் வீ்ட்டில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவட்டார்,

திருவட்டார் அருகே மாத்தார் தைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சிசில். இவருக்கு அஜிதா(35) என்ற மனைவியும், ஸ்ரீஜேஷ்(12), ஸ்ரீசாந்த்(9) என 2 மகன்களும் உள்ளனர்.

சிசில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இதனால், அஜிதா தனது மகன்களுடன் தைவிளாகத்தில உள்ள வீ்ட்டில் வசித்து வருகிறார்.


35 பவுன் நகை கொள்ளை

கடந்த 5-ந்தேதி அன்று அஜிதா மகன்களுடன் மார்த்தாண்டம் கல்லுதொட்டியில் உள்ள தனது தயார் வீ்ட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் நேற்று மாலை அவர் மகன்களுடன் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, குளிர்சாதன பெட்டியின் மீது வைத்திருந்த படுக்கை அறை சாவியை தேடினார். அது மாயமாகி இருந்தது. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டு இருந்தது.

பின்னர், மாற்று சாவியின் மூலம் அறையை திறந்து பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும், அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை, ரூ. 2 லட்சமும் மாயமாகி இருந்தது.

அஜிதா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளை அடித்து விட்டு, அறையின் சாவியையும் எடுத்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும், மோப்பநாய் ஏஞ்சலும் வரவழைக்கப்பட்டது அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீசாரைக் சுட்டுக்கொன்ற உ.பி ரவுடி டெல்லி அருகே பதுங்கல் ! கைது செய்ய போலீசார் தீவிரம்
ரவுடி விகாஸ் துபே டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.
2. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
கீரனூர் அருகே தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.