குமரியில் தொடர் மழை மயிலாடியில் 84.4 மி.மீ. பதிவு பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68½ அடியை நெருங்குகிறது


குமரியில் தொடர் மழை மயிலாடியில் 84.4 மி.மீ. பதிவு பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68½ அடியை நெருங்குகிறது
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 10:24 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால்பெருஞ்சாணி அணைநீர்மட்டம் 68½ அடியை நெருங்குகிறது.மயிலாடியில் 84.4 மி.மீ. மழை பதிவாகியது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆயுத பூஜை தினமான நேற்று முன்தினம் மதியம் குமரி மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று மதியமும் நாகர்கோவிலில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

84.4 மி.மீ. பதிவு

பேச்சிப்பாறை- 3.2, பெருஞ்சாணி- 3, சிற்றார் 1- 2, மாம்பழத்துறையாறு- 26, களியல்- 2.2., குழித்துறை- 7.6, மயிலாடி- 84.4, நாகர்கோவில்- 2, தக்கலை- 14, பாலமோர்- 2.4, கோழிப்போர்விளை- 19, அடையாமடை- 57, குருந்தங்கோடு- 17.2, முள்ளங்கினாவிளை- 5, ஆனைக்கிடங்கு- 29.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தொடர் மழை காரணமாக குமரி மாவட்ட ஆறுகள், கால்வாய்களில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நீர்மட்டம்

நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28.30 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68½ அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.30 அடியாகவும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.40 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 11.90 அடியாகவும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 52.08 அடியாகவும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.50 அடியாகவும் உள்ளன.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 210 கன அடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு 203 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 180 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு 9 கன அடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையில் இருந்து 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்

திற்பரப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான நேற்று திற்பரப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, சிறுவர் பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் திரும்பினர்.

Next Story