அரியலூரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை
முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில், வேளாண்மை அலுவலர்கள் சுப்ரமணியன், சவீதா ஆகியோர் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக 8 தனியார் உர விற்பனையாளர்களுக்கு உரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கடையில் உரம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றது, ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது, இருப்பு மற்றும் விற்பனை சரிசெய்யாமல் இருந்தது, விலைப்பட்டியல் சரியாக பராமரிக்காமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மேலும் விற்பனையாளர்கள் உர உரிமத்தை புதுப்பிக் காமல் விற்பது, கிடங்குகளில் இருப்பு வைப்பது, உரத்துடன் பூச்சிக்கொல்லி நுண்சத்து மற்றும் இதர உரங்களை சேர்த்து வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மற்றும் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக விவசாயிகள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் தகுந்த ஆதாரங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு 94437 00807, அரியலூர் தரக்கட்டுப்பாடு 80726 46160 எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் வட்டார அளவிலான புகார்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி அரியலூர்-70106 70907, திருமானூர்-94436 74577, செந்துறை-98846 32588, ஜெயங்கொண்டம்-97508 90874, ஆண்டிமடம்-98426 92807, தா.பழூர்-94430 92411 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story