மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + 15½ pound jewelry and silver collars broken into house lock

வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நொய்யல்,

கரூர் மாவட்டம், வேலா யுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 49). இவரது அக்கா கவுசல்யா (58). இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு 2 பேரும் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். அங்கு தரிசனம் செய்து விட்டு நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.


நகை திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் அவர்கள் வைத்திருந்த 15½ பவுன் நகைகள், 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், மடிக்கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜெகதீசன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளி கைது
கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. அடப்பன்வயலில் தொழிலாளி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை அடப்பன்வயலில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பனப்பாக்கத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி - மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
பனப்பாக்கத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டு
ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டுபோனது.

ஆசிரியரின் தேர்வுகள்...