மாவட்ட செய்திகள்

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The girl was gang-raped 4 youth On Spanking Law

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விளாத்திகுளம் அருகே சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்வேல் மகன் சுரேஷ்குமார் (20), சின்னசாமி மகன் ராமலிங்கம் (வயது 21), பால்ராஜ் மகன் அழகுராஜா (20). ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் வாழைவெட்டி மகன் ராமச்சந்திரன் (22).

நண்பர்களான இவர்கள் 4 பேரும் சேர்ந்து, கடந்த மாதம் 19-ந்தேதி விளாத்திகுளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமார், ராமலிங்கம், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

இந்த நிலையில் கைதான சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 வாலிபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ் பீட்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பரிந்துரையின்பேரில், சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தினை பேரூரணி மாவட்ட சிறையில் உள்ள சுரேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை