கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி


கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 11 Oct 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்தூர்,

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கிரு‌‌ஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பெனுகொண்டாபுரம் ஆயக்கட்டு விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து கே.ஆர்.பி. அணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி அணையில் இருந்து பெரிய ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பாரூர் பெரிய ஏரி நிரம்பியது. இந்த ஏரியில் இருந்து செல்லும் உபரிநீரால் கோணனூர் ஏரி நிரம்பியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்ந்து புளியம்பட்டி ஏரி நிரம்பி குண்டுபட்டி தடுப்பணை வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் அத்திப்பள்ளம் ஏரியும் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

பெனுகொண்டாபுரம் ஏரி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் வரத்தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story