மாவட்ட செய்திகள்

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா + "||" + Tallakulam Perumal Temple Theppathiru Festival

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
தல்லாகுளம் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அழகர்கோவில்,

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உபகோவில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்கோவில். இந்தகோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழா தனி சிறப்புடையதாகும்.


இந்த விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை தொடர்ந்து தினமும் அன்னம், சிம்மம், ஆஞ்சநேயர், கருடன், சேஷ, யானை, குதிரை போன்ற வாகனங்களிலும் கிருஷ்ணர், ராமர் போன்ற அவதாரங்களிலும், பூப்பல்லக்கிலும், தேரோட்டத்திலும் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதற்காக கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தெப்பகுளம் முழுமையாக நிரப்பிவைக்கப்பட்டு இருந்தது. அதில் அன்னபல்லக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டடு இருந்தது. ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் பல்லக்கில் எழுந்தருளினார். காலை 10.45 மணிக்கு மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் தெப்பத்தில் அன்னப்பல்லக்கு வலம் வந்தது. அப்போது தெப்பத்தை சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் மறுபடியும் தெப்ப உற்சவம் நடந்தது. அப்போது வண்ண விளக்குகளால் அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஏற்பாடு

இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.இன்று (வெள்ளிக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த பிரமோற்சவ புரட்டாசி திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2. கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம்
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார்.
3. திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
5. ரிஷிவந்தியம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.