மராட்டிய சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இந்த நான்கு நாட்களிலும் அவர் 9 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்காவ் மற்றும் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சகோலியிலும், 16-ந் தேதி அகோலா, நவிமும்பை பன்வெல், பார்துரிலும், 17-ந் தேதி புனே, சத்தாரா, பார்லியிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
18-ந் தேதி மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த தகவலை மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி தெரிவித்தார்.

Related Tags :
Next Story