மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம்-கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் + "||" + In taluk offices Agricultural workers Struggling to petition

ஸ்ரீவைகுண்டம்-கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம்-கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கும், பல ஆண்டுகளாக அரசு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சங்க மாவட்ட துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட துணை தலைவர் கணபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் சந்திரனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று கயத்தாறு தாலுகா அலுவலகத்திலும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், மண்டல துணை தாசில்தார் தங்கையாவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.