நாளை தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அறிக்கை


நாளை தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2019 5:09 AM IST (Updated: 12 Oct 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் வி.நாராயணனுக்கு ஆதரவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் வி.நாராயணனுக்கு ஆதரவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார். அவருக்கு அன்று காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எங்கள் தலைமையில் (கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன்) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள், கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story